சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் பவித்ராவின் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 19th, 2021

சினோவெக் கொரோனா தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதற்கிணங்க இது தொடர்பான உடன்படிக்கையொன்றை தயாரித்து கைச்சாத்திடுவதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதிகாரம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம், சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம் மற்றும் கெலுப் லைவ் சயன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: