சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் – சிமெந்து தட்டுப்பாடு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, October 26th, 2021

நாட்டிற்குத் தேவையான சீனியினை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடடப்பட்டுவருவதாக நுகர்வோர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் சந்தையில் சீனி தட்டுப்பாடு நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் சீனி 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது சீமெந்து மூடையொன்று 1,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும், அதிக விலைக்கு சீமெந்தினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரம் இந்தச் சுற்றிவளைப்புகளை மேலும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: