சீனி உற்பத்தி சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதால் சீனியின் விலையில் மாற்றம்!

Tuesday, December 13th, 2016

நாட்டின் சீனி உற்பத்தி சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சீனியின் விலை அதிகரிக்கலாம் எனவும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொக்ஹேய்ன் கடத்தல் காரணமாக பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்தி அந்த சந்தர்ப்பத்தை இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருடாந்தம் 480,000 ஆயிரம் மெற்றிக்தொன் சீனி தேவைப்படுகின்றது. உள்நாட்டு சீனி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால் இதில் 90 வீதமான பகுதி வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.

அதன்படி மாதாந்தம் 40,000 மெற்றிக்தொன் சீனி தேவைப்படுவதுடன் ஒரு நாளுக்கு 1300 மெற்றிக்தொன் சீனி தேவைப்படுகின்றது. பண்டிகை காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மெற்றிக்தொன் சீனியை இலங்கை வாழ் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

எனினும் உள்நாட்டில் சீனி உற்பத்தி செய்யும் ஹிங்குரான,பெலவத்த,செவனகல மற்றும் கந்தளாய் சீனி தொழிற்சாலைகள் இன்று செயலிழந்து காணப்படுகின்றன. சீனி இறக்குமதி செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் சீனியின் விலை அதிகரிக்கும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தொடர்ந்தும் மக்கள் மீது வரி சுமத்தப்படுவதை தடுக்கும் வகையில் உள்நாட்டு சீனி உற்பத்தியை மேம்படுத்தவேண்டும் என அகில இலங்கை கமநலசேவை சம்மேளனம் மேலும் தெரிவிக்கின்றது.

Untitled-1 copy

Related posts: