சீனா – இலங்கை உறவுகள் இரண்டு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையிலானது – இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Friday, December 30th, 2022

இலங்கையுடனான நட்புறவு இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி இரு நாட்டு மக்களுக்கும் இடையிலானது என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவும் இலங்கையும் இனங்கள், மாவட்டங்கள் அல்லது மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கை மக்களுக்கும் நண்பர்களாக இருந்ததாக ஹூ வெய் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு விடியலுக்கு முன்னதாக, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொதிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 7,000 பின்தங்கிய குடும்பங்களுக்கு (ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,400 குடும்பங்கள்) விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் வெய் குறிப்பிட்டார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் விசேட வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: