சீனா இலங்கையின் உண்மையான நண்பன் – உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சீனா மற்றும் இலங்கைக்கு வரலாற்று ரீதியாக தொப்புள் கலாசார தொடர்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தில் அவர்களின் உதவி இல்லையெனில் சர்வதேசத் தடைகளை இலங்கை எதிர்கொண்டிருக்கும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: