சீனாவிடமிருந்து இராணுவ விமானங்கள் கொள்வனவு – பிரதமர்!

Sunday, December 4th, 2016

சீனாவிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு போக்குவரத்து விமானங்களை கொள்வனவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இலங்கையில் பயன்படுத்தப்படும் சீன உற்பத்தி இராணுவ போக்குவரத்து விமானங்களில் நான் பயணம் செய்திருக்கின்றேன்.அவை நன்றாகவே செயற்படுகின்றன. சிலர் இந்த விமானங்களின் தரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.

எனினும், சீன போக்குவரத்து விமானங்கள் சிறந்த முறையில் இயங்குகின்றன என்பதே எனது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.சீனாவிடமிருந்து இரண்டு இராணுவப் போக்குவரத்து விமானங்கள் விரைவில் கொள்வனவு செய்யப்படும் எனவும் இந்த விமானங்கள் பல்தேவை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட உள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளை போக்குவரத்து செய்வதற்கும் இந்த விமானங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சீனா, இந்தியா, சுவீடன் மற்றும் ரஸ்யா போன்ற நாடுகள் தாக்குதல் விமானங்களை விற்பனை செய்து குறித்த யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும், தற்போது இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

57dd66d42fac18863cbc7632312ef857_XL

Related posts: