சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை – எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க!

Saturday, September 4th, 2021

இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக தொடர்ந்தும் இலங்கை சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலில் இலங்கை சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கொரோனா மரணங்கள் மற்றும் நாளொன்றுக்கு இனம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு வாரகாலம் வரை செல்லலாம். அத்துடன் இந்த எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப் படுத்தப்படுவதற்கு நாளொன்றுக்கு இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 வரை குறைவடைய வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர். என்றாலும் தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது எனஎனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: