சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டும் – கஃபே அமைப்பு கோரிக்கை!

Monday, August 31st, 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை கடிதமொன்றையும் தாம் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: