சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் போராட்டம்!!

Friday, February 17th, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிப் பிரச்சினை தொடர்பில் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கவும், அரசுக்குக் கோரிக்கைகள் சிலவற்றை சமர்ப்பிக்கவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் அரச, கூட்டுத்தாபன நிறுவனங்களின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை சிற்றுண்டிச்சாலைகளை மூடிவைக்கத் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையை ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரல், கால்நடைகளுக்கு அரிசியை தீவனமாக வழங்குவதை நிறுத்துதல், பியர் தயாரிப்புக்கு அரிசியை வழங்குவதை நிறுத்துதல், சலுகை விலையில் அரிசியை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்காவிட்டால் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

canteen-1021x563

Related posts: