யாழில் 200 கிலோமீற்றர் வீதிகள் ஐரோட் திட்டத்தில் சீரமைப்பு!

Friday, May 31st, 2019

 “ஐரோட்” திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 200 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொருளியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை, உள்ளூராட்சித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் வீதிகளை சீரமைப்பு செய்வதற்கு இந்தத்திட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தயாராக இருந்நது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 200 கிலோமீற்றர் வீதி சுமார் 6 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டு வேலைகள் கிடப்பில் இருந்தன.

வேலைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. வடக்கில் ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் இந்தத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: