சிறுவர்களை பாதுகாக்கும் புதிய கருவி!

அமெரிக்காவைச் சேர்ந்த ரீபப்ளிக் வயர்லெஸ் என்ற நிறுவனம், பெற்றோர்களையும், சிறுவர்களையும், இணைத்து வைத்திருக்க உதவும் நவீனகருவியை கண்டுபிடித்துள்ளது.
4G LTE மற்றும் WiFi தொழில் நுட்பத்தில் இயங்கும் Walkie ௲ Talkie எனப்படும் இந்த புதிய சாதனமானது வரையரையற்ற தொடர்பு எல்லை கொண்டுதயாரிக்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும்.
சிறுவர்களின் சட்டைப்பையில் வைத்திருக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள கருவியானது, சிறுவர்களை எப்பொழுதும் பெற்றோர்கள்அவதானிக்க உதவுகின்றது. மேலும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
பாடல்களைப்பதிவு செய்து கேட்கக்கூடியவாறும் இச் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு எதிர்பாராமல் நேரக்கூடிய ஆபத்துகளில்இருந்து இதன் மூலம் பாதுகாக்க முடியும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப, இயந்திர வாழ்விற்கு மக்கள் பழக்கப்பட்டுள்ள நிலையில் Walkie ௲ Talkie மூலமாக பிள்ளைகளின்பாதுகாப்பு சாத்தியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
|
|