சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்து!

Friday, August 25th, 2023

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த, இராணுவம் சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகள் உட்பட, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பாட்டுள்ளது.

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட தூதுவர், யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்தநிலையில் ஜனநாயக இலங்கைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஆற்றல்மிக்க குரல்களும் பங்காளிகளும் அவசியம்’ என தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கில் அரசியல் மயமாக்கப்படும்  கல்விக் கட்டமைப்பு - ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ஆசிரியர...
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை - இராணுவத் தளபதி!
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவி...