சிறப்பாக நடைபெற்ற வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு !

Friday, August 18th, 2023

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்றையதினம் (18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் ஆசியுரை வழங்கியிருந்தனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகம் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து குறித்த நடத்திய  பண்பாட்டு பேருவிழா நிகழ்வில் வேலணை பிரதேசத்தை சேர்ந்த 13 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்காள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் மற்றும் வேலணை மத்திய கல்லூரி அதிபர் ஹஸ்ரன் றோய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக அன்னை கடலுணவு வாணிப உரிமையாளர் செபஷ்ரியாம்பிள்ளை அமலதாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்துருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: