சினோபோர்ம், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 25th, 2021சினோபோர்ம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீனாவிலிருந்து 14 மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும், 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகையில் 60% முதல் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த கொள்வனவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபோர்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!
டொலர் கையிருப்பு குறைவடைவு - டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!
|
|