சாதகமான சூழ்நிலை உருவாகும் நேரத்தில் தேர்தலை நடத்துவதே உகந்தது – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற  தேர்தலை சுகாதார தரப்பினரது ஆலோசனையுடன் அவர்கள் கூறும் பொறிமுறையின் பிரகாரம் சாதகமான சூழ்நிலை வரும்போது நடத்துவதே உகந்ததாதாக அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவருமான சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் கட்சிகள் மற்றும் கூட்டுக் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு தேர்தல் நடத்துவது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார நடைமுறையான சமூக இடைவெளியை பேணும் வகையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒவ்வொருவரே அழைக்கப்பட்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் சி. தவராசா சமுகமளித்திருந்தார்

இந்நிலையில் குறஜித்த கூட்டம் தெர்டர்பில் அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் –

ஆரம்பத்தில் கொரோனா தொற்று தெர்ர்பில் எமது மக்களுக்கு அதிகளவான அனுபவங்கள் இல்லாதிருந்தமையால் அது தொடபில் அவர்கள் பெரும் அச்ச நிலையில் இருந்துவந்தனர். ஆனால் தற்போது சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கூறும் வழிமுறைகளை அவர்கள் சரியாக கடைப்பிடித்து அதிலிருந்து தங்களை பாதுகாப்பது தொடர்பில் அதிகளவு அனுபவங்களை பெற்றுள்ளனர். அத்துடன் எமது நாட்டில்  தொற்றாளர்களின் வீதமும் மரண வீதமும் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் குறித்த நோய்த் தொற்றை உடனடியாக நாட்டிலிருந்து அகற்றிவிடவும் முடியாது. இவ்வாறான ஒரு நிலையில் குறித்த பிரச்சனையை காரணம் காட்டி தேர்தல் ஒத்திப் போவதானது நாட்டுக்கு நன்மையானதாக அமையாது.

அந்தவகையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை சரியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் நடத்த ஏதுவான சூழ்நிலை வரும்போது அதை நடத்துவதே சிறந்தது என்றும் மேலும் தெரிவித்த அவர் இவ்வாறானா ஒரு சூழ்நிலையில் அண்மையில் தென்கொரியாவில் தேர்தல் நடைபெற்றதும் அங்கு மக்கள் அதிகமானோர் வெளியில் சென்று வாக்களித்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


“அம்பாம் புயல்” - வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ...
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த...
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் - நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிர...