சர்வதேச வீடமைப்புத் திட்த்தின் 30ஆவது ஆண்டு விழா இலங்கையில்!
Wednesday, January 4th, 2017சர்வதேச வீடமைப்பு வருடத்தின் 30ஆவது ஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது, இதற்கமைய யாவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 21 கிராமங்களில் நிர்மாணப் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
முல்லைத்தீவு, திருகோணமலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, அம்பாறை, , குருநாகல், புத்தளம், காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 685 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
உலகின் சகல நாடுகளிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு நிழல் தரும் வீடொன்றை அமைத்துக் கொடுக்கின்ற யோசனையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1980ஆம் ஆண்டு முன்மொழிந்தார். இதன் பிரகாரம் 1987ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியது.
அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பத்து லட்சம் வீடமைப்புத் திட்டம், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதன் அனுபவங்களைக் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த அனைத்து செயற்பாடுகள் காரணமாக 1987ஆம் ஆண்டின் சர்வதேச வீடமைப்பு விருது இலங்கைக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|