சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
Thursday, December 10th, 2020சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும் மற்ற மனிதரை வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதுமே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
அனைவரும் சுதந்திரமானவர்களாகவும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப் பிரகடனம் வலியுறுத்துகின்றது.
1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொணடது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் முதலிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்கங்களினதும் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்நாள் உணர்த்துகின்றது என்றால் அது மிகையாது.
இந்நிலையில் குறித்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரமதர் உள்ளிட்டநாட்டின் அரசியல் தலைவர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|