சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு – முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!

Thursday, April 13th, 2023

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது.

வொஷிங்டனில் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கைக் குழுவுடனான சந்திப்பின் போது, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் என கூறிய அவர், நெருக்கடியைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: