சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் – நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவிப்பு!

Monday, April 25th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த நிதி அமைச்சரின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் மே மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

அத்துடன்’ நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இது தொடர்பில் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றம் மே 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை கூடவுள்ளது. IMF பேச்சுவார்த்தை தொடர்பாக நிதியமைச்சர் மே 4 ஆம் திகதி சபையில் விசேட அறிவிப்பொன்றை  வெளியிடவுள்ளதோடு அன்றையதினம் காலை 11.00 மணிமுதல் மாலை 5.30 வரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.  

இதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்ற யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு உறுப்பினர்களின் கூட்டத்தை ஏப்ரல் 28 ஆம் திகதி காலை 10.00மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளரத குறிப்பிடத்தக்கது.

000

Related posts: