சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கு தேசியக் கொள்கை – குழுவை நியமிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 10th, 2023

சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்காக தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கு குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், சர்வதேச அளவில் முதல் 1,000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை சட்டரீதியாக அங்கீகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

இலங்கையில் வெளிநாட்டு மருத்துவத் தகுதிகளின் அங்கீகாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதார அமைச்சரினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: