சர்வதேச கடற்பரப்பு மீன்பிடிக்கு புதிய விதிமுறைகள் – கடற்றொழில் அமைச்சு!

Friday, April 21st, 2017

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் புதிய விதிமுறைகளை கடற்றொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.இதன் கீழ் 11 விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

இதற்கமைய மீன்பிடி படகுகளில் கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு என்பன பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் 1500 படகுகளுக்கு, ஏற்கனவே படகு கண்காணிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த விதிமுறைகளை மீறும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: