சம்பள நிலுவை 30 கோடியை பெற்றுத்தருமாறு ஆளுநரிடம் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Friday, July 7th, 2017

வடக்கு மாகாணத்தில் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூபா 30 கோடியை மத்திய அரசிடமிருந்து விடுவிக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,வடக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையான ரூபா 30 கோடி நிதியை கொழும்பு அரசு இதுவரை வழங்கவில்லை. எந்தெந்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எவ்வளவு நிலுவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விபரத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் இதுவரை கொழும்பு அரசிடம் இருந்து நிதி கிடைக்கப்பெறாததால் கொழும்பு அரசிடம் இருந்த நிதி கிடைக்கப் பெறாததால் கொழும்பு அரசிடம் நிதியை வழங்கக் கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

30 கோடி நிதி என்பது சாதாரண தொகை அல்ல. ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் தமது கடமைகளைச் செய்த பின்னர் வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைகள் இதுவரை வழங்கப்படாததால் பலர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். பலர் கடன் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பு அரசிடம் இருந்து 30 கோடி நிதியை விரைவாக விடுத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை காலமும் எமது குழுந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பொறுத்திருந்த நாம் இனிமேலும் பொறுக்க முடியாத அளவுச் சுமைகளை சுமக்கின்றோம். எமக்கான நிலுவைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் கற்பித்தல் பணிகளைப் புறக்கணிப்போம் என்று ஆளுநரிடம் எடுத்துரைத்துள்ளோம் என்றுள்ளது,

Related posts: