சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை!

Monday, August 6th, 2018

அரச ஊழியர்களினது சம்பளம் நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வுக்கு நிகராக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், நீதிமன்ற அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்ட வரைவுத் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரித்து ஏனைய பிரிவுகளின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:

தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் நாட்டுக்கு பயனுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் - ஜனாதிபதி!
அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை - சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலை...
ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும - பிரதி ச...