சமையல் எரிவாயு சிலின்டர் தட்டுப்பாட்டிற்கு இன்னும் 6 நாட்களுக்குள் தீர்வு – லிட்ரோ காஸ் நிறுவனத்தின் விநியோகம் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, November 19th, 2021

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு சிலின்டர் தட்டுப்பாட்டிற்கு இன்னும் 6 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் விநியோகம் மற்றும் வர்த்தக பணிப்பாளர் ஜனக பதிரன தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் சந்தைக்கு சுமார் 6 இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் லாப் ரக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் சந்தையில் எரிவாயு சிலின்டருக்கு பெரும் கேள்வி எழுந்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் வழமையான நாட்களை காட்டிலும் தற்போது சந்தைக்கு 25 சதவீத அளவில் சமையல் எரிவாயு சிலின்டரை விநியோகித்துள்ளது.

இவ்வாரம் சுமார் 8 இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: