சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவுமுதல் அதிகரிப்பு!

Friday, April 27th, 2018

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாக விற்பனைச் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: