சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்கு வரிசையில் காத்திருப்பவர்கள் குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் – அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தன வலியுறுத்து!

Monday, January 17th, 2022

சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் கொழும்பு போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருப்பவர்கள் குறித்தும் செய்தி வெளியிடவேண்டும் என அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பு போர்ட் சி;ட்டியை பார்வையிடுவதற்காகவும், ஆடைகொள்வனவிற்காகவும் மக்கள் வரிசையில் நிற்கின்ற போதிலும் ஊடகங்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக காத்திருப்பவர்கள் குறித்தே செய்தி வெளியிடுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் உள்ளன, பிரச்சினைகள் இல்லையென தெரிவிக்க முடியாது. சமையல் எரிவாயு பிரச்சினை உள்ளது டொலர் பிரச்சினை உள்ளது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தளவு சுற்றுலாப்பயணியும் இலங்கைக்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கொழும்புதுறைமுக நகரம் சமீபத்தில் திறக்கப்பட்டவேளை அதனை பார்வையிடுவதற்காக இரண்டு கிலோமீற்றர்வரை வரிசையில் நின்றவர்கள் குறித்து செய்தி வெளியிடுமாறு ஊடகங்களிற்கு அழைப்பு விடுத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த வரிசையை படம் எடுக்குமாறு கேட்டேன் மக்கள் ஆடைக்கொள்வனவிற்காக வரிசையில் நின்றனர் ஊடகவியலாளர்கள் தங்கள் மைக்குகளை அவர்களை நோக்கியும் நீட்டவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: