சமுர்த்தி பெயரை மாற்ற ஒருபோதும் இடமில்லை – அமைச்சர் எஸ்.பி தெரிவிப்பு!

Tuesday, November 15th, 2016

சமுர்த்தி திட்டத்தை ஜன இசுறு எனப் பெயர்மாற்றம் செய்யவிருப்பதாக நிதியமைச்சர் வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழிந்துள்ள போதிலும் அவ்வாறான பெயர்மாற்றத்துக்கு இடமளிக்க முடியாதென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியிருக்கும்போது வறுமை ஒழிப்புத் திட்டத்தின் அச்சாணியாக விளங்கும் சமுர்த்தியை பெயர்மாற்றம் செய்வதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் “திவி நெகும” என்ற பெயரில் அழைக்கப்படும் திட்டத்தை சமுர்த்தி என மாற்றுவதாற்கான ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்த விடயம் தற்சமயம் சட்ட ஒழுங்குகள் திணைக்களத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

SP.

Related posts: