எமது போராட்டத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்- ஏற்பாட்டுக்குழு!

Monday, June 27th, 2016
சற்றுமுன்னர் ஆரம்பமான வலி வடக்கின் மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்களின் போராட்டத்தை தாம் அரசியலாக்க விரம்பவில்லை என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை ஆரம்பமாகிய குறித்த போராட்டம் UNHCR அலுவலகம் சென்று தமது கோரிக்கை மனுவை கையளித்தனர்.
இதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது கோரிக்கை மனுவை கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதை அரசியலாக்கும் முயற்சியாக பல சுலோகங்களை போராட்டத்திற்கள் முதன்மை படுத்த முயற்சித்த வேளை ஏற்பாட்டுக்குழுவினர் தமது போராட்டத்தை யாரும் அரசியல் மயப்படுத்தவதை தாம் விரும்பவில்லை என கூறி குறித்த சுலோகங்களை அகற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு  குறித்த பிரதேச மக்களது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளது.

13

4

12

2

7

3

image-0.02.01.6606252a323fc5b886a7ae5f913068a3fe1ec5dbbbcfd81a806884a8aa54d434-V

123

Related posts: