சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு!

Monday, January 30th, 2017

சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களுக்காக 3 ஆயிரத்து 972 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சமுர்த்தி உதவிகளை பெறும் ஒரு குடும்பம் வீதம் தெரிவு செய்யப்பட்டு இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 331 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கான நிர்மாணப் பணிகளுக்கு மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமுர்த்தி லொத்தர் டிக்கெட் விற்பனை மூலம் இதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படுகின்றதாகவும் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

632014f4dac7bd8745b82c1aafca3513_XL

Related posts: