சமஸ்கிருதத்தை விட தமிழ் பழைமையானது – மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு!

Tuesday, February 20th, 2018

சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். மோடியின் இந்தக் கூற்று பெருமிதம் தருகிறதுஎன்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தமிழ் மொழி பழைமையானது என்று மோடி கூறியிருந்தார்.

இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது. மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையையும், பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன் என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Related posts: