சமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்களம்!

Saturday, April 11th, 2020

பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த திணைக்களம் அமைச்சர் சமல் ராஜபக்சவின் கீழ் இயங்கவுள்ளது.

அமைச்சுகளுக்கான விடயங்கள் தொடர்பில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தத்தை மேற்கொண்டு கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts: