சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, எண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும், அதற்காக மக்கள் வருந்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்ட பின்னர் இலங்கையில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட இடமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்

அத்துடன் முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 36 ஆயிரம் மெற்றிக் டன் பெற்றோல் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: