பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!
Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜி.வை. ஆரியரட்ண (வயது 22) என்ற இளைஞனே இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் நேற்று (16) மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முகாமில் உள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் தூக்கிட்டமைக்கான காரணம் தெரியவில்லை. சடலம் தொடர்பான விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பூமியின் கீழ் உறங்கிக்கொண்டிருக்கும் பூகம்பம்: வருமா ஆபத்து!
நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார்? - உடன் வெளிப்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் ம...
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
|
|
|
தம்பாட்டியில் நள்ளிரவு திருடர்கள் கைவரிசை - ஆலயம் உள்ளிட்ட பல இடங்கள் உடைத்து பெறுமதியான பொருட்கள் த...
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் - முச்சக்கர வண்டி சாரதிகளிடம...
எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது - தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவ...


