சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரனைகள் மீதான செயற்பாடுகள் மிக மந்தகதியிலே காணப்படுகிறது – ஈ.பி.டி.பியின்  யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செவ்வவடிவேல்!

Friday, December 14th, 2018

யாழ் மாநகரசபையில் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் நிறேவேற்றப்பட்ட குறித்த பிரேரனைகள் மீதான செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலே காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செவ்வவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாநகரின் இவ்வருடத்திற்கான இறுதி அமர்வு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இன்றயதினம் நடைபெற்றது. குறித்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

எமது இந்த உயரிய சபையினால் நடைமுறைப்படுத்தவென தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் செயல்வடிவம் பெற நீண்டகாலம் எடுப்பது வெதனையான விடயம். குறிப்பாக யாழ்.நகரின் வீதி ஒழுங்குகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டவை இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. அதுபோல இன்றும் பல திட்டங்களும் உள்ளன  எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் காலங்களிலாவது அபிவிருத்தி திட்டங்களிற்கு விரைவான செயல்வடிவம் கொடுக்க யாழ் மாநகரசபை தன்னாலான முழுக்கவனத்தினையும் செலுத்தி செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்..

யாழ் மாநகரசபையின் இந்த ஆண்டிற்கான இறுதியமர்வே இன்றயதினம் நடந்ததுடன் அடுத்த அமர்வு புதிய ஆண்டில் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: