சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை – வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு!

சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இடங்களில் தற்போதுள்ள விலையையும் விட குறைந்த விலைக்கு ஆடைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கான ஆடைத் தேவையில் 100 சதவீதமும் உள்நாட்டு உற்பத்திகளைக் கொண்டு பூரணப்படுத்துவதற்கு முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உள்ளுர் சந்தையில் ஆடைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்று: இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது – உலகில் இதுவரை 88,000 பேர் உயிரிழப்பு!
பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - வர்த...
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்...
|
|