சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு கைது!

Thursday, February 21st, 2019

இலங்கையையும், துருக்கியையும் மையமாகக்கொண்டு சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த குழு ஒன்று இந்தியாவின் கான்பூர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஒப் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறுநீரகத்தொகுதி தேவைப்படுகின்ற இலங்கை மற்றும் துருக்கியில் உள்ள செல்வந்தர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் உள்ள ஏழ்மையானவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகத் தொகுதியை அகற்றி அவர்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், கான்பூரில் உள்ள விருந்தம் ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: