சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 77 பேர் மட்டக்களப்பில் கைது!

Monday, July 11th, 2022

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 77 பேர் மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேர் ஏறாவூர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் திருகோணமலை துறைமுக காவல்துறையில் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைதானவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: