சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!
Tuesday, July 23rd, 2019கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் எவரும் அங்கு தங்க வைக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கோரோனா வைரஸ் : யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் விசேட அறிவுரை!
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது தடுப்பூசி - சுக...
8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!
|
|