சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

Monday, January 7th, 2019
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை (07)  சக்கோட்டை கடற்பரப்பில் இருந்து கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடற்பரப்பில் படகு ஒன்றில் பொதிகள் செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. கடற்படையினர் தேடுதல் போட்டு சுமார் 118 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டில் எவரையும் கடற்படையினர் கைதுசெய்யவில்லை. அநாமதேயமாக படகில் இருந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் கடற்படையினரால் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: