க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரப்படுகின்றன.

இந்த நிலையில், குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: