கோதுமை மா விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – 400 கிராம் பாணின் விலையும் இன்று நள்ளிரவுமுதல் 30 ரூபாவால் உயர்வு!

Thursday, May 19th, 2022

கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமது கோதுமை மா விலையை அதிகரிக்குமாறு அனைத்து முகவர்களுக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம்முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை செரன்டிப் நிறுவனம் 35 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது தொழிற் துறை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான உரிய சலுகை வழங்கப்படாத பட்சத்தில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து இடை விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: