கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!

Saturday, August 7th, 2021

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் 1999 அல்லது 0117 966366 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் தேவையான உதவியைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது நிலைமை மோசமாக இல்லை என்றால் சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் சிகிச்சை நிலையத் துக்கு அழைத்துச் செல்வது நல்லது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: