கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது – சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை!

Wednesday, January 13th, 2021

கொழும்பை அண்மித்த கரையோரங்களில் முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

கழிவு நீரோடைகள், ஆறுகள், வடிகான்களிலிருந்து கடலுக்குள் நீர் கலக்கும் பகுதிகளிலேயே அதிகளவில் கழிவுகள் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கொழும்பு – வௌ்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை போன்ற கடற்கரைகளிலேயெ அதிகளவில் முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் இவ்வாறு குவிந்துள்ளதாகவும் டேர்னி பிரதீப் தெரிவித்திருந்தார். மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் எனவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: