கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் முன்னிலை:  பல்கலைக்கழக நுழைவுக்கு 167,960 பேர் தகுதி!

Monday, December 31st, 2018

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியதுடன், அவர்களில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 960 பேர் பல்கலைக்கழக நுழைவு தகுதியை பெற்றுள்ளனர்.

இந்த முறை பிரதான ஆறு பாடங்களின் ஊடாக உயர்தரப் பரீட்சையில் பங்கேற்ற 119 பேரின் பெறுபேறுகள் நிறுத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதிவரை அனுப்பிவைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை மீளாய்வு விண்ணப்பங்கள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், வெளிவாரியான பரீட்சாத்திகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் அனைத்து பாடப் பிரிவுகளிலும், இம்முறை சிங்கள மொழிமூல மாணவர்களே அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

உயிர் முறைமைகள் பிரிவில் மாத்திரம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் மொஹிடீன் பாவா ரிஸா மொஹமட் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதுதவிர தமிழ்மொழி மூலம் எந்தவொரு மாணவரும் அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களுக்குள் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் - போக்...
ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த ...