கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை – மாவட்ட செயலாளர் மகேசன் தெரிவிப்பு!

Monday, April 27th, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த பாரவூர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு குறித்த பி.சி.ஆர் பிரசோதனை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது  30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொரோனா வைரஸ் பரவல் அபாய வலயமாக காணப்படும் நிலையில் அங்கு சென்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமி குறிப்பிடத்தக்கது.

Related posts: