கொழும்பில் நீராவி ரயிலின் பயணம் ஆரம்பம்!

Monday, February 5th, 2018

கொழும்பு – கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை நீண்டகாலத்திற்கு பின்னர் கடந்த 29ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த பெட்ரிக் நோர்த் என்றநீராவி ரயில் நான்கு நாள் வெற்றிகரமான பயணத்தை முடித்து கொண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த ரயில் இரண்டு நீராவி இயந்திரங்களைக் கொண்டுள்ள நிலையில் இதில் ஜேர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இலங்கையின் இந்த நீராவி ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் விருப்பம் கொண்டுள்ளனர். அதற்காக ஆசனங்களை ஒதுக்கவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான பணத்தைச் செலுத்துகின்றனர்.

மேலும் மிகவும் பழமை வாய்ந்த இந்த ரயில் சிறப்பாக ஓடும் நிலையில் உள்ளதாகவும் அதில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு தேவையானவசதிகள் ரயில் பெட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: