ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவருக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும்  தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில் -, “அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.

நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்த காலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலைதான்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: