கொழும்பில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை – கொழும்பு மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

Sunday, October 18th, 2020

கொழும்பிலுள்ள மக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2 ஆவது அலை நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு மாவட்ட மக்களையும்  கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பேருந்து தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: