கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்த நிலையில், அவற்றில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:


மாகாணசபை அதிகாரத்தை பறித்தெடுத்தவர் பிரேமதாசவே - விக்கி இதை அறியாமலுள்ளார் என்பது வெட்கமாகவுள்ளது எ...
சொந்த மண்ணில் சொந்த மொழி பேசிகௌரவமான வாழ்வை வாழ வழிவகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாநகர...
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!