நடைபாதை வியாபாரத்திற்குத் தடை!

Saturday, April 8th, 2017

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எங்களிடம் அனுமதி பெறாமல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ளோம். எமது அறிவுறுத்தல்களையும் மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் எம்மால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளோம்.

ஆனால், இதனைச் சற்றும் கருத்திலெடுக்காது ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில வியாபாரிகளும், சில புதிய வியாபாரிகளும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்தும் வியாபாரிகள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவார்களாயின் வியாபாரிகளின் பொருட்கள் கைப்பற்றப்பட்டுத் தண்டம் அறவிடப்படும்.

அத்துடன் அதற்கும் மேலாக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவிதித்துள்ளார்.

Related posts:


கொரோனா தொற்றினால் உலகளவில் 1 கோடியே 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 5 இலட்சத்து 4 ஆயிரத்தி...
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் - அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!